நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டுக் காவல் மேல்முறையீட்டை நஜிப் திரும்பப் பெற்றார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக், தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றம் தாக்கல் செய்திருந்த நீதித்துறை மறுஆய்வு மனு மீதான தனது மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றார்.

பெக்கான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த நஜிப், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து 42 மில்லியன் ரிங்கிட்டை கையாடல் செய்த குற்றத்திற்காக தற்போது காஜாங் சிறையில் தனது தண்டனையை அனுபவித்து வருகிறார்.

ஏப்ரல் 2 ஆம் தேதி ஷாஃபி அண்ட் கோ என்ற சட்ட நிறுவனம் அனுப்பிய அறிவிப்பின் மூலம், மேல்முறையீட்டாளரான நஜிப் பிரதிவாதிக்கு எதிரான தனது மேல்முறையீட்டை, மீண்டும் தாக்கல் செய்வதற்கான அனுமதியின்றியும் செலவுகள் தொடர்பான எந்த உத்தரவும் இன்றியும் திரும்பப் பெற விரும்புவதாக அந்த நிறுவனம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

இந்தத் தள்ளுபடி நடவடிக்கைக்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

ஏப்ரல் 14 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் துணைப் பதிவாளர், வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட தள்ளுபடி அறிவிப்பு சரியானது என்று பதிவுசெய்து அதைத் தொடர்ந்து நஜிப்பின் மேல்முறையீட்டு அறிவிப்பை ரத்து செய்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset