நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

15,000 பேர் திரண்ட மீன்பிடித் திருவிழா: 10 லட்சம் ரிங்கிட் பரிசை அள்ளிய திரெங்கானு நபர்

அலோர் ஸ்டார்: 

ஜாலான் டத்தோ கும்பாரில் உள்ள தித்தி மெகா குளத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட மீன்பிடிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக மலேசியா முழுவதிலிருந்தும் சுமார் 15,000 மீன்பிடி ஆர்வலர்கள் திரண்டனர். 

ஒரு மில்லியன் ரிங்கிட் (RM1 Million) ரொக்கப் பரிசை வெல்வதற்காக நடைபெற்ற இந்தப் போட்டி, அப்பகுதி முழுவதையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இப்போட்டியில் திரெங்கானு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர், 9.5 கிலோ எடையுள்ள கெளுத்தி மீனைப் பிடித்து முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் ஒரே நாளில் RM1 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பரிசை வென்று கோடீஸ்வரரானார். 

அவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தையும் திரெங்கானுவைச் சேர்ந்த மற்றொருவர் தட்டிச் சென்றார். அவர் பிடித்த மீன் 8.5 கிலோ எடையிருந்தது, இதற்காக அவருக்கு RM100,000 ரிங்கிட் பரிசு வழங்கப்பட்டது.

மூன்றாம் இடத்தை சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த நபர் பிடித்தார். அவர் 8 கிலோ எடையுள்ள மீனைப் பிடித்து RM50,000 ரிங்கிட் ரொக்கப் பரிசைத் தனதாக்கினார். 

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொருவரிடமும் RM220 ரிங்கிட் நுழைவுக் கட்டணமாகப் பெறப்பட்டது. வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத் தொகை காரணமாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மீன்பிடி ஆர்வலர்கள் இப்போட்டியில் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பங்குபெற்ற மற்ற வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், 700-ஆவது இடம் வரை வருபவர்களுக்கும் RM500 ரிங்கிட், RM440 ரிங்கிட் என ஆறுதல் பரிசுகளை ஏற்பாட்டாளர்கள் வழங்கினர். 

இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் மீன்பிடிப் போட்டி நடத்தப்பட்டது அப்பகுதியில் உள்ள 'காகி பஞ்சிங்' (Geng Kaki Pancing) எனப்படும் மீன்பிடிப் பிரியர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset