நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர்கள் நெருக்கடியைத் தீர்க்க சிறப்பு நல்லிணக்கக் குழுவை அமைக்க வேண்டும்: அம்னோ

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர்கள் நெருக்கடியைத் தீர்க்க சிறப்பு நல்லிணக்கக் குழுவை அமைக்க வேண்டும்.

நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.

அரச நிறுவனங்களையும், 1959ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் அரசியலமைப்பையும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
இதனால் தற்போதைய நெருக்கடி நீண்ட காலம் நீடிக்காது என்று தாம்  நம்புவதாக அவர் கூறினார்.

இப்போது ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையை மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட முடியாது.

இதன் மூலம் மக்கள் தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதைத் தடுக்க முடியும்.

நெகிரி செம்பிலானில் தற்போது நிலவும் சர்ச்சை, அரசியலமைப்பு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒரு சிறப்பு நல்லிணக்கக் குழு அமைக்கப்பட வேண்டும்.

நெருக்கடியைத் தீர்க்க உடனடி இந்த  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset