செய்திகள் மலேசியா
அதிகாலைச் சோதனையில் சிக்கிய பந்தயக் கும்பல்: 16 முதல் 19 வயதுடைய இளைஞர்கள் அதிரடியாக கைது
ஈப்போ:
மஞ்சோங், சித்தியாவான் பகுதியில் உள்ள 'வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்வே' (WCE) நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்றைய தினம் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 46 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத பந்தயங்களை முறியடிக்கும் நோக்கில் அதிகாலை 1 மணி முதல் 6 மணி வரை இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 138 மோட்டார் சைக்கிள்கள், 8 கார்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 234 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, சாலைகளில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டிய 16 முதல் 19 வயதுடைய நான்கு இளைஞர்கள் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டவிரோத பந்தயங்கள், சாலை அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தவும் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக மஞ்சோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 46 வாகனங்களும் மேலதிக விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் இது போன்ற சட்டவிரோதச் செயல்கள் அல்லது சாலை ரவுடித்தனம் குறித்துத் தெரிந்தால், உடனடியாக மஞ்சோங் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 1:11 pm
சிலாங்கூரில் உள்ள 688 ஆலய விவகாரத்தில் தெளிவான விளக்கம் தேவை; மக்களை குழப்பக்கூடாது: குணராஜ்
April 27, 2026, 1:10 pm
16ஆவது பொதுத் தேர்தலில் மூவார் தொகுதியைக் கைப்பற்ற பாஸ் கட்சி விரும்புகிறது
April 27, 2026, 1:09 pm
வீட்டுக் காவல் மேல்முறையீட்டை நஜிப் திரும்பப் பெற்றார்
April 27, 2026, 11:56 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கான ஆதரவை அம்னோ திரும்பப் பெற்றது
April 27, 2026, 11:34 am
எரிபொருள் மானியச் சுமை: ஒரு வினாடிக்கு 2,300 ரிங்கிட் செலவிடும் மலேசிய அரசு
April 27, 2026, 11:16 am
