நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கான ஆதரவை அம்னோ திரும்பப் பெற்றது

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் அம்னோ மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹருணுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது.

மந்திரி புசாரின்  தலைமை மீது நம்பிக்கை இழந்ததன் காரணமாக, 14 மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்ததாக மாநில அம்னோ தலைவர் ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.

இது குறித்து மாநில சட்டமன்ற சபாநாயகர்,  மாநில செயலாளருக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்படும் என்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் நிறுவனங்கள், அரசியலமைப்பு,  சட்டங்களை நாங்கள் முழுமையாக ஆதரித்து பாதுகாக்கிறோம்.

மேலும் மக்களின் நல்வாழ்வு, மாநிலப் பொருளாதாரத்தின் நோக்கங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இதற்கு மாநில நிர்வாகத்தில் சிறந்த பங்கை ஆற்றக்கூடிய ஒரு நிலையான அரசாங்கத்தை நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.


இன்றைய செய்தியாளர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பின்படி, 12 மாநில அம்னோ தலைவர்களும் அங்கு இருந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset