நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியானா பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயம்

ப்ளூமிங்டன்: 

உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ப்ளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒரு இளைஞர் உட்பட குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர்.

ஆண்டு 'லிட்டில் 500' சைக்கிள் பந்தய விழாவின் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, அப்போது பார்வையாளர்கள் நிறைந்திருந்த கிர்க்வுட் அவென்யூவில், நள்ளிரவு 12.25 மணியளவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததாக ப்ளூமிங்டன் போலிஸார் தெரிவித்தனர்.

போலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை வந்தடைந்ததும், பலர் காயமடைந்திருப்பதைக் கண்டுபிடித்து, உடனடியாக மருத்துவ உதவியை வழங்கினர்.

அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் துப்பாக்கிச் சூடு அல்லது தோட்டாக்கள் மூலம் காயமடைந்ததாகத் தெரிகிறது. அதே சமயம் மீதமுள்ளவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயற்சிக்கையில் காயமடைந்தனர்.

பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று, வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், வாய் தகறாரைத் தொடர்ந்து பலர் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலிஸார் நம்புகிறார்கள், இருப்பினும், இதுவரை எந்தக் கைதும் செய்யப்படவில்லை.

இந்தச் சம்பவத்தில் இந்தியானா பல்கலைக்கழக மாணவர்கள் யாரும் ஈடுபடவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்தியானா பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில், சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் தாங்கள் நெருக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும், விசாரணைகள் தொடரும் போது, அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தது.

சம்பவத்தின் சாட்சிகள் அல்லது வீடியோ பதிவுகளை வைத்திருப்பவர்கள், விசாரணைக்கு உதவுமாறும் போலிஸார் கேட்டுக்கொண்டனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset