செய்திகள் உலகம்
10 மில்லியன் டாலர் இணைய மோசடி: இந்தோனேசிய நபர் தாய்லாந்தில் கைது
பாங்காக்:
அமெரிக்கக் குடிமக்களை ஏமாற்றி சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் 33 வயது இந்தோனேசிய நபர் ஒருவரைத் தாய்லாந்து குடிவரவுத் துறை போலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) அமைப்பு கொடுத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பூக்கெட் நகரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் வைத்து அவர் அதிரடியாகப் பிடிபட்டார்.
சந்தேக நபர் துபாயிலிருந்து கடந்த புதன்கிழமை தாய்லாந்திற்குள் நுழைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் அழகான பெண்களை வேலைக்கு அமர்த்தி, அதன் மூலம் வீடியோ அழைப்புகள், சமூக வலைதளங்கள் வழியாக ஆசை வார்த்தைகளைக் கூறி, போலி முதலீட்டுத் திட்டங்களில் அமெரிக்கர்களைப் பணத்தைச் செலுத்த வைத்துப் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
துபாயிலிருந்தபடி இந்த மோசடி வலையமைப்பை இவர் இயக்கி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் தற்போது பாங்காக் நகரில் உள்ள தடுப்புக்காவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளார். எஃப்.பி.ஐ அதிகாரிகளின் கோரிக்கைக்கு இணங்க, அவரை விசாரணைக்காக அமெரிக்காவிற்கு நாடுகடத்தும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தென்கிழக்கு ஆசியா, துபாய் போன்ற பகுதிகள் தற்போது இத்தகைய பன்னாட்டு இணையவழி மோசடிகளுக்கு முக்கியத் தளமாக மாறிவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, கிரிப்டோ கரன்சி முதலீடுகள், போலி காதல் வலையில் வீழ்த்தி உலகளவில் பல பில்லியன் டாலர்கள் கொள்ளையடிக்கப்படுவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மோசடி கும்பல்கள் துபாய் போன்ற இடங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், சொத்து வாங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
