நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளிக்கிழமை தொழுகை, அஸான் தொடர்பான சிலாங்கூர் சுல்தானின் கட்டளைக்கு கீழ்ப்படியாத நபர் கைது: போலிஸ்

ஷாஆலம்:

வெள்ளிக்கிழமை தொழுகை, அஸான் தொடர்பான சிலாங்கூர் சுல்தானின் கட்டளைக்கு கீழ்ப்படியாத நபரை போலிசார் கைது செய்தனர்.

சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் இதனை கூறினார்.

அம்பாங்கில் உள்ள தாமான் செராயாவில் இருக்கும் ஒரு சூராவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான அழைப்பு ஆகியவற்றை அமல்படுத்துவது தொடர்பாக, சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இத்ரிஸ் ஷாவின் உத்தரவுகளை  ஆடவர் மீறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த உத்தரவை மீறிய வழக்கு குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஆடவரை ஒருவரை போலிசார் கைது செய்தனர்.

46 வயதான அந்த நபர் இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் பாண்டன் இண்டா பகுதியில் கைது செய்யப்பட்டார்.

கூடுதல் விசாரணைகளுக்கு உதவும் வகையில் ஒரு மடிக்கணினி, ஒரு கைபேசி மற்றும் அது தொடர்பான பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

சோதனையில் சந்தேக நபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை.

சிறுநீர் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக இருந்ததும் தெரியவந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset