நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளி அதிகமான மாணவர்களை கொண்ட பள்ளியாக உருவெடுக்கும்: அருள்குமார்

சிரம்பான்:

நெகிரி செம்பிலானில் உள்ள சங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளி
அதிகமான மாணவர்களை கொண்ட பள்ளியாக உருவெடுக்கும்.

மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள்குமார் கூறினார்.

சங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 41ஆவது விளையாட்டு போட்டி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இப்போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

குறிப்பாக பள்ளி நிர்வாகம், வாரியக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்கள் சங்கம் என அனைவரும் ஒற்றுமையாக இப்போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

மேலும் மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டுத் துறையிலும் சாதிக்க வேண்டும்.

அதற்கு இதுபோன்ற விளையாட்டு போட்டிகளை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று அருள்குமார் கூறினார்.

இதனிடையே சங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளி மிகப் பெரிய வீடமைப்பு பகுதியில் அமைந்துள்ளது.

இதனால் அதிகமான மக்கள் இங்கு மாறி வந்துக் கொண்டிருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியாக சங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளி உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது.

ஆக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட்டால் இப்பள்ளி சிறந்த வளர்ச்சியை கானும் என்று அருள்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset