நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களின் வரலாறுகளை பதிவு செய்யவில்லை என்றால், நமது அடையாளம் அழிந்து விடும்: டத்தோஸ்ரீ சரவணன்

ஈப்போ:

இந்தியர்களின் வரலாறுகளை பதிவு செய்யவில்லை என்றால், நமது அடையாளம் அழிந்து விடும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

இந்த நாட்டின் மேம்பாட்டிற்கு உழைத்த இந்தியர்கள் என்ன செய்தார்கள் என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நம்முடைய சாதனைகள் வரலாறு பதிவுகளாக இடம் பெற சமுக அமைப்புகள் இந்த பதிவுகளை செய்ய வேண்டும்.

இந்த நாட்டில் நம்முடைய இனத்தின் அடையாளத்தை  அழிக்க சிலர் துடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த நாட்டிற்கு உழைத்த நம்முடைய சமுதாயத்தின் வரறாறுகளையும மறந்த நிலைக்கு ஆளாகலாம்.

மேலும் தோட்டப் புறத்தில வசித்து வந்த இந்தியர்கள படிப்படியாக அதிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.

காலப் போக்கில் காட்டை தோட்ட முக்கிய இந்தியர்கள  வாழ்ந்தார்களா என்ற கேள்விகள் எழலாம்.

ஆகவே இந்தியர்களின் வரலாற்று பதிவுகள் மிகவும் அவசியமானது.

ஈப்போவில் உள்ள கிந்தா இந்தியர்  சங்க மண்டபத்தின் இணைக் கட்டடம் சீரமைக்கப்பட்டு அதில் டியூஷன் வகுப்பு,  உறுப்பினர்களுக்காக அமைக்கப்பட்ட ஓய்வறை திறந்து வைத்து ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு பேசினார்.

கிந்தா இந்தியர் சங்கம் வரலாற்றுப்பூர்வ அமைப்பு. அந்த அமைப்பு எழுப்பிய மண்டபத்திற்கு மஇகாவும் பெரும் பங்காற்றியுள்ளது.

இந்த அமைப்பு குறிப்பிப்பாக விளையாட்டுத் துறையில் பல விளையாட்டாளர்களை உருவாக்கிய வரலாறுகள் அடங்கியுள்ளது.

அவைகளின் வரலாறுகளை நினைவில் கொள்ள பதிவுகளை செய்யவேண்டும் இதற்கு தம்மால்  முடிந்த உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், கிந்தா இந்தியர் சங்க விளையாட்டுத் துறைக்கு பல வரலாற்று பதிவுகளை  பந்து  பயிற்றுனர் டத்தோ கருத்துவின் பதிவுகள் செய்யவும் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset