நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து 6 மாநிலங்களுக்கு தலைமையேற்க வேண்டும்: சிலாங்கூருக்கு அஸ்மின் அலி

ஷாஆலம்:

பேரா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், சபா ஆகிய மாநிலங்களுக்கான தேசியக் கூட்டணி தலைவர்களாக ஆவதற்கு பெர்சத்து சில பெயர்களைப் பரிந்துரைத்துள்ளது.

தேசியக் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் சம்சுரி மொக்தாரிடம் இந்தப் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு மாநிலங்களுக்கான தலைமைப் பதவிகள் பெர்சத்துவின் ஒதுக்கீட்டின் கீழ் வருவதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அறிவித்தார்.

தேசியக் கூட்டணியை வழிநடத்த பாஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களையும் நான் பட்டியலிட்டுள்ளேன்.

சிலாங்கூரைப் பொறுத்தவரை, அஸ்மின் அலியின் பெயரை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

ஏனெனில் அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார் என்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset