நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வட மலேசியா பல்கலைக்கழகத்தில் மாணவி மரணம்; தந்தையின் 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

அலோர்ஸ்டார்:

கடந்த 2022இல் வட மலேசியா பல்கலைக்கழக தங்கும் விடுதியில் மின் அதிர்ச்சியால் தனது மகள் இறந்தார்.

இதை தொடர்ந்து  தந்தை தாக்கல் செய்திருந்த கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரிய வழக்கை அலோர்ஸ்டார் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

வாதியான ஆர். சிவகுமார் பல்கலைக்கழகத்திற்கு எதிரான தனது வழக்கை நிரூபிக்கத் தவறிவிட்டார் என்பதைக் கண்டறிந்த நீதிபதி முகமது யோஹான் லீ, இந்த வழக்கை 5,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தார்.

தனது தீர்ப்பில் 21 வயதான வினோசினியின் மரணத்திற்கு மின் அதிர்ச்சியே காரணம் என்பதை வாதி நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று யோஹான் குறிப்பிட்டார்.

இறந்தவரின் கணுக்காலில் இருந்த திசுநோயியல் கண்டுபிடிப்புகள் மற்றும் காயத் தழும்புகளின் அடிப்படையில், மின் அதிர்ச்சியே மரணத்திற்குக் காரணம் என மருத்துவ அதிகாரி தயாரித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவு செய்திருந்தது.

அந்த அறிக்கையை வாதி பெரிதும் நம்பியிருந்தார்.

இருப்பினும் குறுக்கு விசாரணையின் போது, ​​சம்பவம் நடந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்போ அல்லது விசாரணையை முடிப்பதற்கு முன்போ, 2022 மே 22 அன்றே மின் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்ற ஆரம்பக்கட்ட கருத்தை தான் கொண்டிருந்ததாக மருத்துவ அதிகாரி ஒப்புக் கொண்டார்.

அவரது கண்டுபிடிப்புகளில் அடிப்படைக் குறைபாடுகள் இருந்தன என்று அவர் கூறியதாக தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset