நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தலில் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஸ் கட்சி போட்டியிடும்: சனுசி

கோலாலம்பூர்:

மலாக்கா மாநிலத் தேர்தலில் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில்.பாஸ் கட்சி போட்டியிடும்.

பாஸ் கட்சியின் தேர்தல் தலைமை இயக்குநர் சனுசி நோர் இதனை கூறினார்.

மாநிலத்தின் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் கட்சி பெற்ற வெற்றியைக் கருத்தில் கொண்டு,

மலாக்கா சட்டமன்ற தேர்தலில் 15க்கும் மேற்பட்ட  வேட்பாளர்களை பாஸ் நிறுத்தும்.

ஜாசின், டாங்கா பத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, போட்டியிடப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை யதார்த்தமானதாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்ற வாக்குகளை சட்டமன்றத்துக்கு மாற்றும்போது பாஸ் வெற்றி பெறுவதற்கு மிகவும் நியாயமான வாய்ப்பு இருப்பதைக் காண்கிறோம்.

இது, நாங்கள் வெறுமனே போட்டியிடவில்லை.

மாறாக ஒரு கடுமையான போட்டியைக் கொடுக்கும் திறன் கொண்டவர்கள் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset