செய்திகள் மலேசியா
பாங்கி லாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கிண்ண விளையாட்டு போட்டி; ஒற்றுமையை வலுப்படுத்துகிறது : டத்தோ டி. மோகன்
பாங்கி:
பாங்கி லாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கிண்ண விளையாட்டு போட்டி ஒற்றுமையை வலுப்படுத்துகிறது.
சுக்கிம் தலைவர் டத்தோ டி. மோகன் இதனை கூறினார்.
பாங்கி லாமாவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் 80 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஆலயமாகும்.
இந்த ஆலயத்தின் தலைவர் பன்னீர் செல்வம் ஏற்பாட்டில் இன்றைய விளையாட்டு போட்டி நடைபெற்றது.
குறிப்பாக ஆலயத்தின் செயலாளர் தவனேஷ் ஒருங்கிணைப்பில் இப்போட்டி நடைபெற்றது.
பெண்களுக்கான கபடி, இளையோர் பெரியார்களுக்கான கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.
சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் ஆர்வத்துடன் இப்போட்டிகளில் கலந்து பரிசுகளை தட்டிச் சென்றனர்.
இவ்வேளையில் போட்டி ஏற்பட்டாளர்களுக்கும் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது பாராட்டுகள்.
மேலும் வட்டார மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் இதுபோன்ற போட்டிகள் பரவலாக நடத்தப்பட வேண்டும் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.
ஆலயங்கள் சமய வழிபாடுகளை மீறி மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் தளமாகவும் இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தாம் இப்போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியை தொடர்ந்து பாங்கி லாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் திருவிழா வரும் மே 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவிலும் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆலயத்தின் செயலாளர் தவனேஷ் கேட்டு கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 9:57 pm
முன்னாள் உறுப்பினர்களை ஏற்றுக் கொள்வதில் அம்னோவுடன் ஒப்பிட வேண்டாம்: டான்ஸ்ரீ மொஹைதின்
April 26, 2026, 9:56 pm
பெர்சத்து 6 மாநிலங்களுக்கு தலைமையேற்க வேண்டும்: சிலாங்கூருக்கு அஸ்மின் அலி
April 26, 2026, 9:50 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஸ் கட்சி போட்டியிடும்: சனுசி
April 26, 2026, 9:50 pm
சங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளி அதிகமான மாணவர்களை கொண்ட பள்ளியாக உருவெடுக்கும்: அருள்குமார்
April 26, 2026, 4:19 pm
சுகாதார அமைச்சின் புதிய இலக்கு: 2030-க்குள் 3D தொழில்நுட்பத்தில் பல் செட் திட்டம்
April 26, 2026, 1:44 pm
