செய்திகள் மலேசியா
3 வயது மகனை சித்திரவதை செய்த பெண்ணுக்கு போலிஸ் வலைவீச்சு
கோம்பாக்:
சிலாங்கூர், பத்துமலைப் பகுதியில் தனது மூன்று வயது மகனைச் சித்திரவதை செய்ததாகக் கருதப்படும் பெண் ஒருவரைப் போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பாட்டி அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரே வீட்டில் வசிக்கும் அந்தப் பாட்டி, தனது பேரன் அழுதுகொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு, அச்சிறுவன் தாக்கப்படுவதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர் அச்சிறுவனின் பெற்ற தாயே என்பதை உறுதி செய்துள்ள போலிசார், இக்கொடூரச் செயலுக்கான காரணம் குறித்துத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு '2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது தலைமறைவாக உள்ள அந்தத் தாயைக் கண்டுபிடிக்கப் போலிசார் பல்வேறு கோணங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்துத் தகவல் அறிந்த பொதுமக்கள் அல்லது அந்தப் பெண் இருக்குமிடம் தெரிந்தவர்கள் உடனடியாகப் புலனாய்வு அதிகாரி அமிருல் அஷ்ரஃப் அபு ஹசனை 019-3491233 என்ற எண்ணிலோ அல்லது கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 1:14 pm
யூ.ஐ.டி.எம் பல்கலைக்கழக வாயிலில் அநாகரிகச் செயல்: மர்ம நபருக்கு போலிஸ் வலைவீச்சு
April 26, 2026, 12:51 pm
உலக மேடைக்குத் தயாராகும் மலேசிய மாணவிகள்; 1 லட்சம் ரிங்கிட் நிதியுதவியை வழங்கும் பிரதமர் அன்வார்
April 26, 2026, 12:15 pm
கஞ்சா மிட்டாயால் மயங்கிய 3 வயது சிறுமி: 39 வயது நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்
April 26, 2026, 11:13 am
வறட்சியின் பிடியில் வடக்கு மாநிலங்கள்: அபாயக் கட்டத்தை நோக்கி அணைகள்
April 26, 2026, 10:49 am
அஸிசூல் ஹஸ்னியின் வெற்றியைக் கண்டு மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்: பிரதமர் அன்வார்
April 26, 2026, 10:27 am
மக்களின் புகார்கள் மேஜையில் குவிய விடாதீர்கள்: அப்துல் ரவுஃப்
April 26, 2026, 10:21 am
பாதுகாப்பு உடைகள் வெறும் படுக்கை விரிப்புகளா? மீனவர்களின் ஆபத்தான போக்கு
April 26, 2026, 9:53 am
