செய்திகள் உலகம்
ஜப்பானில் பயங்கரம்: மனைவியைக் கொன்று மிருகக்காட்சிசாலையின் எரிமூட்டியில் வீசிய கணவன் கைது
ஹொக்கைடோ:
ஜப்பானின் ஹொக்கைடோ நகரத்தில் உள்ள அசாஹியாமா மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது மனைவியைக் கொலை செய்து, அவரது உடலை அங்கிருந்த கழிவு எரிமூட்டியில் (Insinerator) வீசியதாகக் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
முன்னதாக, ஏப்ரல் 23-ஆம் தேதி அந்தப் பெண் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது கணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அந்த நபர் மீது சடலத்தை மறைத்தல், அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார், எரிமூட்டி அமைந்துள்ள பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பிட்ட அந்த மிருகக்காட்சிசாலையானது பராமரிப்புப் பணிகள், கோடைக்கால முன்னேற்பாடுகளுக்காக ஏப்ரல் 8 முதல் 28 வரை மூடப்பட்டிருந்தது.
எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி 'கோல்டன் வீக்' விடுமுறையை முன்னிட்டு பூங்காவை மீண்டும் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது அங்கு நடைபெற்று வரும் காவல்துறை விசாரணை, தேடுதல் பணிகளால், திட்டமிட்டபடி பூங்காவைத் திறப்பதா வேண்டாமா என்பது குறித்து நகர நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
