செய்திகள் மலேசியா
புதிய எம்ஏசிசி தலைவர் துணிச்சலாக இருக்க வேண்டும்; அரசியல் அழுத்தங்களை எதிர்க்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர்கள்
கோலாலம்பூர்:
புதிய எம்ஏசிசி தலைவர் துணிச்சலாக இருப்பதுடன் அரசியல் அழுத்தங்களை எதிர்க்க வேண்டும் என இரு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எம்ஏசிசி தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமான், அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும்.
அவர் எந்தவொரு அரசியல் அழுத்தத்திற்கோ அல்லது சுயநலக் குழுக்களுக்கோ அடிபணியக் கூடாது’ என்றும் பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறியுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இன்று எம்ஏசிசியின் முதன்மைப் பதவிக்கு ஹலீமை நியமித்ததை அறிவித்ததைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
எம்ஏசிசியை எந்தக் கட்சியும் ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது; அதைப் பார்க்கவே கூடாது என்று கூறினார்.
இதற்கிடையில், பாரபட்சம், அரசியல் தலையீடு அல்லது பாகுபாடு இல்லாமல் ஒரு விசாரணை நடத்தப்படுவதை மக்கள் நிச்சயமாக விரும்புகிறார்கள் என்று தேசியக் கூட்டணி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 9:53 am
நாட்டில் 5 லட்சம் பேர் 4 நோய்களுடன் வாழ்கின்றனர்: டாக்டர் சுல்கிப்ளி
April 25, 2026, 9:09 pm
அசாம் பாக்கிக்கு எதிரான பேரணி எம்ஏசிசியில் விரிவான மாற்றத்தை வலியுறுத்துகிறது
April 25, 2026, 9:08 pm
எம்ஏசிசியை வழிநடத்த அப்துல் ஹலிம் அமான் பொருத்தமானவர்: டத்தோஸ்ரீ அன்வார்
April 25, 2026, 9:04 pm
எனது அரசியல் நிலைப்பாட்டை ஜூன் மாதத்தில் அறிவிப்பேன்: ரபிசி
April 25, 2026, 9:03 pm
சோகோவிற்கு முன் பட்டாசு வெடித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை போலிஸ் தேடி வருகிறது
April 25, 2026, 6:03 pm
