நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் 5 லட்சம் பேர் 4 நோய்களுடன் வாழ்கின்றனர்: டாக்டர் சுல்கிப்ளி

கோலாலம்பூர்:

நாட்டில் 5 லட்சம் பேர் 4 நோய்களுடன் வாழ்கின்றனர் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மத் கூறினார்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் போன்ற தொற்றா நோய்கள் மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்களாகத் தொடர்கிறது.

இதன் மூலம் மலேசியா ஒரு கவலைக்குரிய பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
தேசிய சுகாதார மற்றும் நோய்நிலைக் கணக்கெடுப்பின்  அடிப்படையில், 

நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான பெரியவர்கள் ஒரே நேரத்தில் குறைந்தது நான்கு முக்கிய தொற்று இல்லாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமை ஒரு தனிப்பட்ட சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, இது தேசியப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தொற்று இல்லாத நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் 64.2 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இங்குள்ள துன் அப்துல் ரசாக் நினைவிடத்தில் நடைபெற்ற 'மை கூராங்' சமையல் குறிப்புப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset