செய்திகள் மலேசியா
புதிய எம்ஏசிசி தலைவர் கார்பரேட் மாஃபியா குற்றச்சாட்டுகளை விசாரித்து, சீர்திருத்தத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்: கோபிந்த் சிங்
புத்ராஜெயா:
புதிதாக பதவியேற்கவிருக்கும் எம்ஏசிசி தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான், அத்தியாவசிய சீர்த்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
அவரது தலைமைப் பதவி மே 13 முதல் அமலுக்கு வரும் நிலையில் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான், ஆணையத்தின் தனது தூரநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்ட வேண்டும்.
மேலும் எம்ஏசிசி சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் அதிகார துஷ்பிரயோகங்களைத் தடுக்கவும், நீதியை நிலைநாட்ட அவர் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கும் குறிப்பிட்ட சீர்திருத்தங்களின் செயல் திட்டத்தையும் முன்வைக்க வேண்டும்.
எம்ஏசிசி மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே அவரது உடனடி முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
இதற்கு, அந்த அமைப்பைச் சுற்றியுள்ள "பெருநிறுவன மாஃபியா" நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளைக் கையாள்வதும், அவருக்கு முந்தைய தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி சம்பந்தப்பட்ட பங்குதாரர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசிமான ஒன்றாக தாம் கருதுவதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
பெருநிறுவன மாஃபியா குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணைகளின் போது சில எம்ஏசிசி அதிகாரிகள் பெருநிறுவன சூழ்ச்சிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் எம்ஏசிசியின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் பாதிக்கின்றன.
அச்சமோ, பாரபட்சமோ, தாமதமோ இன்றி, தெளிவான காலக்கெடுவுடன் இவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக புதிய தலைவரின் உடனடிச் செயல் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதாக இருக்க வேண்டும்.
ஆக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்பாக எழுந்துள்ள கார்பரேட் மாஃபியா குற்றச்சாட்டுகளையும், முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தொடர்பான பங்கு உரிமைகள் தொடர்பான சர்ச்சையையும் தீர்க்க வேண்டும்.
கார்பரேட் மாஃபியா குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணைகளின் போது சில எம்ஏசிசி அதிகாரிகள் நிறுவன நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் எம்ஏசிசியின் நம்பகத்தன்மையையும் ஒழுக்க நெறியையும் பாதிக்கின்றன.
ஆக, எதனையும் எவரையும் பொருட்படுத்தாமலும், கட்டுக்குட்படாமலும் தாமதமின்றி, தெளிவான காலக்கெடுவுடன் இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்.
முன்னாள் தலைவர் அசாம் பாக்கியின் பங்கு வைத்திருப்பு விவகாரம் குறித்து, ஒரு மாதத்திற்கு முன்பே அமைச்சரவை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்த போதிலும், இன்னும் நிலுவையில் தான் உள்ளது.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், ஒரு முறையான செயல்முறை பின்பற்றப்பட வேண்டும் என்று விளக்கினாலும்,இது நிர்ணயிக்கப்பட வேண்டிய காலவரையின்றி தொடர முடியாது.
அதோடு புதிய எம்ஏசிசி தலைவர், இதுபோன்ற நீடித்த, தீராத குற்றச்சாட்டுகள் இல்லாமல் தனது பதவிக்காலத்தைத் தொடங்க வேண்டும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக ஜ.செ.க தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2026, 9:09 pm
அசாம் பாக்கிக்கு எதிரான பேரணி எம்ஏசிசியில் விரிவான மாற்றத்தை வலியுறுத்துகிறது
April 25, 2026, 9:08 pm
எம்ஏசிசியை வழிநடத்த அப்துல் ஹலிம் அமான் பொருத்தமானவர்: டத்தோஸ்ரீ அன்வார்
April 25, 2026, 9:04 pm
எனது அரசியல் நிலைப்பாட்டை ஜூன் மாதத்தில் அறிவிப்பேன்: ரபிசி
April 25, 2026, 9:03 pm
சோகோவிற்கு முன் பட்டாசு வெடித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை போலிஸ் தேடி வருகிறது
April 25, 2026, 6:03 pm
திட்டமிடப்பட்ட அஸாம் பாக்கிக்கு எதிரான பேரணி பிசுபிசுத்தது
April 25, 2026, 5:26 pm
அரசியல் விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டோம்: பினாங்கிற்கு 60% வளர்ச்சியை உறுதி செய்தது மடானி அரசு
April 25, 2026, 4:36 pm
"சமூக வலைதள விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள்": ஜே.பி.ஜே.-க்கு பிரதமர் அன்வார் அறிவுரை
April 25, 2026, 4:07 pm
