நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அசாம் பாக்கிக்கு எதிரான பேரணி எம்ஏசிசியில் விரிவான மாற்றத்தை வலியுறுத்துகிறது

கோலாலம்பூர்:

டான்ஸ்ரீ அசாம் பாக்கிக்கு எதிரான பேரணி எம்ஏசிசியில் விரிவான மாற்றத்தை வலியுறுத்துகிறது.

இன்று மாலை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்  தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிரான பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் உரையாற்றிய அரசியல் தலைவர்கள், அந்த ஆணையத்தில் ஒரு முழுமையான மாற்றம் தேவை என்று அழைப்பு விடுத்தனர்.

அரசாங்கம் அஸாம் பாக்கிக்கு  பதிலானவரை அறிவித்திருந்தபோதிலும், நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு அமைப்பில் மாற்றம் அவசியம் என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சீன் சுங் கூறினார்.

அமைப்பு மாற்றப்படும் வரை, தனிநபர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள  முடியாது.

எங்களுக்கு ஒரு முழுமையான மாற்றம் வேண்டும்  என்று அவர் இன்று மாலை பேரணியில் பங்கேற்றவர்களிடம் கூறினார்.நம்

முன்னதாக பங்கேற்பாளர்கள் சோகோவிலிருந்து டத்தாரான் மெர்டேக்காவுக்கு அணிவகுத்துச் செல்ல விரும்பினர்.

ஆனால் ஜாலான் ராஜா லாவூட்,  ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் இடையே பேரணி முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset