செய்திகள் மலேசியா
230 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு: அரசு சாரா இயக்கத்தின் துணைத் தலைவர், நிறுவன இயக்குநரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர்:
சுமார் 230 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசு சாரா இயக்கத்தின் நிதியை கையாடல் செய்தது தொடர்பாக, அதன் துணைத் தலைவர் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோரின் காவல் நீட்டிப்பிற்கு சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணையம் அனுமதி பெற்றுள்ளது.
இரு சந்தேக நபர்களுக்கான அசல் காவல் காலம் இன்று முடிவடைந்தது.
இதை அடுத்து இன்று காலை ஷாஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எம்ஏசிசி அளித்த மனுவின் பேரில், துணைப் பதிவாளர் ஃபைசா நோர்ரந்தரன், இரு சந்தேக நபர்களுக்கும் எதிரான ஐந்து நாள் காவல் உத்தரவை ஏப்ரல் 30 வரை பிறப்பித்தார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை முதல் இரு சந்தேக நபர்களும் நான்கு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது சுமார் 150 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 33 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.
இதற்கிடையில், தொடர்பு கொண்டபோது சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் முகமது அஸ்வான் ரம்லி இந்த விஷயத்தை உறுதிசெய்து, இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 10:49 am
அஸிசூல் ஹஸ்னியின் வெற்றியைக் கண்டு மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்: பிரதமர் அன்வார்
April 26, 2026, 10:27 am
மக்களின் புகார்கள் மேஜையில் குவிய விடாதீர்கள்: அப்துல் ரவுஃப்
April 26, 2026, 10:21 am
பாதுகாப்பு உடைகள் வெறும் படுக்கை விரிப்புகளா? மீனவர்களின் ஆபத்தான போக்கு
April 26, 2026, 9:53 am
நாட்டில் 5 லட்சம் பேர் 4 நோய்களுடன் வாழ்கின்றனர்: டாக்டர் சுல்கிப்ளி
April 25, 2026, 9:09 pm
அசாம் பாக்கிக்கு எதிரான பேரணி எம்ஏசிசியில் விரிவான மாற்றத்தை வலியுறுத்துகிறது
April 25, 2026, 9:08 pm
எம்ஏசிசியை வழிநடத்த அப்துல் ஹலிம் அமான் பொருத்தமானவர்: டத்தோஸ்ரீ அன்வார்
April 25, 2026, 9:04 pm
