நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசியை வழிநடத்த அப்துல் ஹலிம் அமான் பொருத்தமானவர்: டத்தோஸ்ரீ அன்வார்

புக்கிட் மெர்தாஜாம்:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைமை ஆணையராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் நியமிக்கப்பட்டுள்ளதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்.

அவர் நீதித்துறையைச் சேர்ந்தவர்.

மேலும் எந்தவொரு பெரிய வணிகம், அரசியல் கட்சி போன்றவற்றிலும் அவருக்குத் தொடர்பில்லை.

எனவே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை வழிநடத்தவும், அதன் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தவும் அவர் பொருத்தமானவர் என்று நான் கருதுகிறேன்.

யாயாசான் அமானில் நாடி குபாங் செமாங்கைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம்  நியமிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக மூன்று முறை ஓராண்டு பதவிக்கால நீட்டிப்புகளைப் பெற்று வரும் மே 12 அன்று பதவிக்காலம் முடிவடையும் அசாம் பாக்கிக்கு பிறகு 69 வயதான ஹலிம் பதவியேற்பார் என்று அவர் கூறினார்.

நீதித்துறையிலான இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஹலிம், 2005இல் நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

தெமர்லோ, குவாந்தானில் பணியாற்றிய பிறகு, 2007இல் உயர் நீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற்றார்.

பின்னர், பினாங்கு, ஜொகூர் பாரு மற்றும் ஷாஆலம் ஆகிய இடங்களில் பணியாற்றி, 2023ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset