நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறையை முதலாளிகள் அனுமதிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்: 

வீட்டிலிருந்தே பணிபுரிதல் உள்ளிட்ட பணி ஏற்பாடுகளைப் பின்பற்றுமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் வேண்டுகோளுக்கிணங்கத் தனியார் துறை முதலாளிகள் பின்பற்ற வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.

பல நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள் ஏற்கனவே வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறைகளைப் பின்பற்றுவதாக அவர் கூறினார்.

"பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், சாத்தியமான சிறந்த சேமிப்புகளை அடைய அரசாங்கமும் பாடுபடுகிறது" என்று பிரிக்ஃபீல்ட்ஸில் நடைபெற்ற வெற்றி மடானியைத் தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

செலவுகளைக் குறைப்பதற்காக அமைச்சுகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ரமணன், இந்த விஷயம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையுடன் தான் உடன்படுவதாகக் கூறிய அவர், இது ஒரு புதிய முன்னேற்றம் அல்ல என்றும் மேலும் கூறினார்.

"அமைச்சரவைக் கூட்டங்களின் போது பிரதமர் எங்களுக்கு இதைத் தெரிவித்தார். இது நிர்வாகத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்கள், துறைகளின் தலைவர்களுக்கும் பொருந்தும்" என்றார் அவர்.

ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கிய அரசாங்கத்தின் வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறையின் ஏற்பாட்டில் சுமார் 200,000 அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset