நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

"சமூக வலைதள விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள்": ஜே.பி.ஜே.-க்கு பிரதமர் அன்வார் அறிவுரை

பத்து காவான்: 

சாலைப் போக்குவரத்துத் துறையானது (ஜே.பி.ஜே.) தனது கடமைகளைச் செயல்படுத்துவதில், குறிப்பாக போக்குவரத்துச் சட்டங்களை அமல்படுத்துவதில், தொடர்ந்து தனது உறுதியை மேம்படுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் ஒரு நிறுவனமாக, ஜே.பி.ஜே. எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பொது கவனத்திற்கும், ஆய்வுக்கும் உட்பட்டது என்றும், இதற்கு உயர் ஒருமைப்பாடும் திறனும் தேவை என்றும் அவர் கூறினார்.

"சில நேரங்களில் ஜே.பி.ஜே. உறுதியாக இருக்கும்போது, அது பொதுமக்களால் நன்றாகப் கவனிக்கப்படுவதில்லை… அது மென்மையாகவும், அதிகப்படியான தளர்வாகவும் இருந்தால், அது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

"எனவே, ஜே.பி.ஜே. அதிகாரிகள் குறிப்பாக இன்றைய சமூக ஊடகங்களுடன் நேரடிக் கண்காணிப்பின் சூழ்நிலையில் உள்ளனர். சில விமர்சனங்கள் மதிப்புகள், ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை, மற்றவை தீங்கிழைக்கும் நோக்கம், வெறுப்பால் உந்தப்பட்டவை… எனவே நாம் எதிர்கொள்ளும் சவால்கள் இன்னும் அதிகமாக உள்ளன" என்றார் அவர்.

இன்று இங்குள்ள மாநில அரங்க வளாகத்தில் நடைபெற்ற ஜே.பி.ஜே.-வின் 80வது ஆண்டு விழா,ஜே.பி.ஜே. மடானி மெகா கார்னிவாலில் உரையாற்றிய போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset