செய்திகள் மலேசியா
குப்பை எரித்தபோது நேர்ந்த விபரீதம்: சமூகப் பொறுப்பு புறக்கணிக்கப்படுகிறதா?
பாச்சோக்:
குப்பைகளை எரித்ததில் தீயைப் பரவச் செய்து அருகிலிருந்த வாகனத்தைத் சேதப்படுத்திய குற்றத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 4.30 மணியளவில், இங்குள்ள ஜாலான் பந்தாய் பெர்காசாவில், ஒரு புதர் நிலப்பகுதி, ஒரு கைவிடப்பட்ட வாகனத்தை உள்ளடக்கிய தீ குறித்து போலிஸார் புகாரைப் பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
பாச்சோக் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் முஹம்மத் இஸ்மாயில் ஜமாலுதீன், ஒரு கைவிடப்பட்ட வீட்டின் முன்புறம் ஒரு புதர் நிலப்பகுதியும், ஒரு வாகனமும் எரிந்து கொண்டிருப்பதாகவும், அந்தத் தீ வீட்டிற்கு அருகில் பரவும் அளவுக்கு மூண்டதாகவும் பொதுமக்கள் மூலம் புகார்தாரருக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
இருப்பினும், அந்தத் தீ பொதுமக்களால் அணைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
"மேலதிக விசாரணையில், சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள ஒரு பெண்ணுக்குச் சொந்தமான நிலத்தில் குப்பைகளை எரித்ததற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 285-ன் கீழ் விசாரணைக்கு உதவும் வகையில், அந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டார்.
தனிப்பட்ட செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பை பாதிக்கும் நிலையில், இத்தகைய அலட்சியங்களுக்கு கடுமையான நடவடிக்கை அவசியமாகக் கருதப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 25, 2026, 12:46 pm
ஐப்பானில் மோசடி கும்பலில் சிக்கிய மலேசியர்: நான்கு ஆண்டுகள் சிறைவாசம்
April 25, 2026, 10:36 am
உலகளாவிய பிளாஸ்டிக் தட்டுப்பாடு: மாற்று ஆதாரங்களைத் தேடுகிறது மலேசிய அரசாங்கம்
April 25, 2026, 10:05 am
மலேசியாவும் புருணையும் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு உறவை தொடர்ந்து வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன
April 24, 2026, 11:11 pm
அக்டோபரில் தேர்தலை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ அன்வார் தயாராகிறார்: புளூம்பர்க்
April 24, 2026, 11:09 pm
பொறாமையின் காரணமாக முன்னாள் கணவரால் மியன்மார் பெண் கத்தியால் குத்திக் கொலை
April 24, 2026, 11:08 pm
