நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கால்பந்து துறையில் சாதனையாளர்களை உருவாக்கும் மீபாவின் திட்டங்களை மஇகா, எம்ஐஇடி ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

சுங்கைபூலோ:

கால்பந்து துறையில் சாதனையாளர்களை உருவாக்கும் மீபாவின் திட்டங்களை மஇகா, எம்ஐஇடி ஆதரிக்கும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

கடந்த காலங்களில் எம்ஐஇடி நிதியை கொண்டு கல்வி திட்டங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும்.

ஆனால் அதன் சட்டத் திட்டங்கள் மாற்றப்பட்டு தற்போது விளையாட்டு உட்பட சமூக நலத் திட்டங்களுக்கும் அதன் நிதி பயன்படுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில் தான் மீபாவின் திட்டங்களை மஇகாவும் எம்ஐஇடியும் ஆதரித்து வருகிறது.

குறிப்பாக இளம் பிள்ளைகளை கால்பந்து விளையாட்டில் சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும் என்பதே மீபாவின் இலக்காக உள்ளது.

கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக மீபா இம்முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில்  இன்றைய போட்டியும் நடைபெறுகிறது.

பல்லின விளையாட்டாளர்கள் இதில் பங்கேற்று உள்ளது இப்போட்டிக்கு கிடைத்த வெற்றிகயாகும்.

ஆக இப்போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு 50,000 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

இந்த நிதி வருங்காலத்தில் அதிகமான போட்டிகளை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset