செய்திகள் மலேசியா
எம்.ஆர்.எஸ்.எம் பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர் மீது பகடிவதை தாக்குதல்: சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படங்களால் பரபரப்பு
கோலாலம்பூர்:
பேராக்கில் மக்தாப் ரெண்டா சைன்ஸ் மாரா (எம்.ஆர்.எஸ்.எம்.)-இல் நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் பகடிவதை வழக்கின் புகார் குறித்து, மஜ்லிஸ் அமான ராக்யாட் (மாரா ) நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலான, அந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் கத்தரிக்கப்பட்டதால் கிழிந்த பள்ளிச் சீருடையைக் காட்டும் புகைப்படத்தைத் தொடர்ந்து, அதன் தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ய்ராஃப் வஜ்தி துஸூகி இதைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அஸ்ய்ராஃப் வஜ்தி, தனது கல்வி நிறுவனங்களில் பகடிவதை வழக்குகள் குறித்து தாம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று அவர் தமது பேஸ்புக் பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
எம்.ஆர்.எஸ்.எம்.-இல் நடந்த அந்த பகடிவதை சம்பவம் குறித்து, கைருல் நிஜாம் என்ற பேஸ்புக் உரிமையாளர், அஸ்ய்ராஃப் வஜ்தியின் பேஸ்புக் பதிவின் கருத்துப் பகுதியில் ஒரு புகாரைப் பதிவிட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தப் பதில் வந்தது.
சம்பந்தப்பட்ட புகாரின் படி, நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து பகடிவதையையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், சம்பந்தப்பட்ட எம்.ஆர்.எஸ்.எம்.-மைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் சந்தேக நபர்களாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர் படிவம் 1 மாணவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆடைகளை கத்தரித்தல், மிரட்டல் கடிதங்களை அனுப்புதல், மிரட்டுதல், சுவரில் எழுதுதல் மன துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
கல்வி நிலையங்களில் நடைபெறும் இத்தகைய கொடுமைகள் கடுமையாகத் தடுக்கப்பட வேண்டும்; மாணவர்களின் பாதுகாப்பு எந்த நிலையிலும் சமரசப்படக் கூடாது. மாணவர்களின் பாதுகாப்பும் மரியாதையும் உறுதி செய்யப்படுவது கல்வி அமைப்பின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 25, 2026, 4:36 pm
"சமூக வலைதள விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள்": ஜே.பி.ஜே.-க்கு பிரதமர் அன்வார் அறிவுரை
April 25, 2026, 4:07 pm
டீசல் வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி: சாலை வரியைக் குறைக்க அரசு திட்டம்
April 25, 2026, 1:43 pm
குப்பை எரித்தபோது நேர்ந்த விபரீதம்: சமூகப் பொறுப்பு புறக்கணிக்கப்படுகிறதா?
April 25, 2026, 12:46 pm
ஐப்பானில் மோசடி கும்பலில் சிக்கிய மலேசியர்: நான்கு ஆண்டுகள் சிறைவாசம்
April 25, 2026, 10:36 am
உலகளாவிய பிளாஸ்டிக் தட்டுப்பாடு: மாற்று ஆதாரங்களைத் தேடுகிறது மலேசிய அரசாங்கம்
April 25, 2026, 10:05 am
மலேசியாவும் புருணையும் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு உறவை தொடர்ந்து வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன
April 24, 2026, 11:11 pm
