நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொறாமையின் காரணமாக முன்னாள் கணவரால் மியன்மார் பெண் கத்தியால் குத்திக் கொலை

ஸ்தாப்பாக்:

பொறாமையின் காரணமாக முன்னாள் கணவரால் மியன்மார் பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில் மார்சஸ் இதனை உறுதிப்படுத்தினார்.

கோலாலம்பூர் ஸ்தாப்பாக் கெந்திங் கோர்ட்டில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், பொறாமையின் காரணமாக நடந்ததாக நம்பப்படும் ஒரு சம்பவத்தில் மியன்மார் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

பிற்பகல் சுமார் 2.20 மணியளவில் பொதுமக்களிடமிருந்து வந்த அழைப்பின் மூலம் இந்தச் சம்பவம் குறித்த தகவல் தமது துறைக்குக் கிடைத்து.

சம்பவம் நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், ஒரு நபரால் அவர் கத்தியால் குத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட போலிஸ் குழு, அதே நாளில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்தது.

ஆரம்பகட்ட விசாரணையில் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் முன்னாள் கணவர் என்பதும், இது பொறாமையின் காரணமாக நடந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset