செய்திகள் மலேசியா
அக்டோபரில் தேர்தலை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ அன்வார் தயாராகிறார்: புளூம்பர்க்
கோலாலம்பூர்:
அக்டோபரில் தேர்தலை எதிர்கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தயாராகி வருகிறார் என புளூம்பர்க் கூறியுள்ளது.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் மானியங்களில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த குறைப்புகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இதனால் அவர் மூன்றாவது காலாண்டில் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாக இவ்விவகாரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்வாரின் பதவிக் காலம் வரும் 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதவிக்காலம் முடிவடையவுள்ளது.
அதற்கு முன்னர் தனது அரசாங்கம் மானியங்களை மேலும் குறைக்க நிர்பந்திக்கப்படாவிட்டால், அக்டோபருக்குள் தேர்தல்களை நடத்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தகவல் பொதுவெளியில் இல்லாததால், தங்களை அடையாளம் காட்ட வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
பரிசீலனைகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளன.
இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
டத்தோஸ்ரீ அன்வாரின் அலுவலகமும் நிதியமைச்சகமும் கருத்துகளுக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:09 pm
பொறாமையின் காரணமாக முன்னாள் கணவரால் மியன்மார் பெண் கத்தியால் குத்திக் கொலை
April 24, 2026, 11:08 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் மரணமடைந்த வங்காளதேச ஆடவருக்கு நீதி கோரும் இணையவாசிகள்
April 24, 2026, 11:06 pm
விசாரணையைத் தொடர்ந்து படினி, அதன் துணை நிறுவனங்களின் பல வங்கிக் கணக்குகளை எம்ஏசிசி முடக்கியுள்ளது
April 24, 2026, 6:03 pm
எல் நினோ இந்த ஆண்டு நடுப்பகுதியில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது: ஐ.நா.
April 24, 2026, 4:03 pm
