நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் மரணமடைந்த வங்காளதேச ஆடவருக்கு நீதி கோரும் இணையவாசிகள்

கோலாலம்பூர்:

மேக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் மரணமடைந்த வங்காளதேச ஆடவருக்கு இணையவாசிகள் நீதி கோரி வருகின்றனர்.

நேற்று மேக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து அவருக்கு நீதி கோரும் குரல் இணையத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று பல சமூக ஊடகப் பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அட்வான்ஸ் கேமிங் என்ற வீடியோ கேம் உள்ளடக்கத்தை உருவாக்கியவர் எனப் பரவலாக அறியப்பட்ட 22 வயதான முசாஹித் மில்லாத், கேஎல்ஐஏவில்  இருந்து தனது மனைவியுடன் பயணித்த போது மற்றொரு வாகனத்தால் மோதப்பட்டதில் உயிரிழந்தார்.

அவரது மனைவி, 23 வயதான நஃபீசா தபஸ்ஸும் அடிபா, காயங்களுடன் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மது போதையில் இருந்த ஓட்டுநர் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் இந்த விபத்து,

இணையத்தில், குறிப்பாக வங்காளதேசப் பயனர்களிடையே பலதரப்பட்ட எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.

குறிப்பாக அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset