செய்திகள் மலேசியா
முன்னாள் அதிகாரி பணத்தைத் திருடி ஆப்பிரிக்காவில் பதுக்கி வைத்ததாகக் கூறும் குற்றச்சாட்டு; ஆதாரங்களை காட்டுங்கள்: அன்வார்
ஜொகூர்பாரு:
வெளிநாட்டில் பணம் வைத்திருப்பது தொடர்பாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஆல்பர்ட் டெய் என்ற நபர் சம்பந்தப்பட்ட வைரல் வீடியோ தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் தான் ஏற்கப்போவதில்லை என்று கூறினார்.
ஆதாரம் இருந்தால், கொண்டு வாருங்கள். யாரும் விதிவிலக்கல்ல.
ஆதாரம் இல்லை என்றால், நான் அதை ஏற்க மாட்டேன் என்று இவ்விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டபோது அவர் கூறினார்.
முன்னதாக பிரதமரின் முன்னாள் அதிகாரி ஒருவர் மீது சுமத்தப்பட்ட முறைகேடுகள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளைக் கொண்ட சோபியா ரினி என அறியப்படும் ஒருவரால் பகிரப்பட்டது.
இந்த வைரல் ஒலிப்பதிவு குறித்து விசாரிக்குமாறு பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துன் பைசல் இஸ்மாயில் அஜிஸ் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:11 pm
அக்டோபரில் தேர்தலை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ அன்வார் தயாராகிறார்: புளூம்பர்க்
April 24, 2026, 11:09 pm
பொறாமையின் காரணமாக முன்னாள் கணவரால் மியன்மார் பெண் கத்தியால் குத்திக் கொலை
April 24, 2026, 11:08 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் மரணமடைந்த வங்காளதேச ஆடவருக்கு நீதி கோரும் இணையவாசிகள்
April 24, 2026, 11:06 pm
விசாரணையைத் தொடர்ந்து படினி, அதன் துணை நிறுவனங்களின் பல வங்கிக் கணக்குகளை எம்ஏசிசி முடக்கியுள்ளது
April 24, 2026, 6:03 pm
எல் நினோ இந்த ஆண்டு நடுப்பகுதியில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது: ஐ.நா.
April 24, 2026, 4:03 pm
