நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐப்பானில் மோசடி கும்பலில் சிக்கிய மலேசியர்: நான்கு ஆண்டுகள் சிறைவாசம்

கோலாலம்பூர்:

ஜப்பானின் தோயாமானிஷியில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய முஹம்மத் ஃபாயிக் ஸாஃப்ரான் முஹம்மத் ஜைலானி, நேற்று தோயாமா குற்றவியல் நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

 மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அவர் கைது செய்யப்பட்ட நவம்பர் 18, 2025 முதல், அது நடைமுறைக்கு வருவதாகவும் அவரது குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் டத்தோ நூர் ஸ்வெட்லானா முஹம்மத் நூர் நோர்டின் தெரிவித்தார்.

முஹம்மத் ஃபாயிக் ஸாஃப்ரானின் மொத்த தண்டனை நான்கு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

"இருப்பினும், அடுத்த நடவடிக்கைகளுக்காக நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு நோட்டீஸைத் தாக்கல் செய்வோம்.

"ஜப்பானிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 25-ன் கீழ், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான விதிகள் இருப்பதால், அவர் நிபந்தனைகளுடன் தாயகம் திரும்புவார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று, முஹம்மத் ஃபாயிக் ஸாஃப்ரானின் விசாரணை முடிந்தவுடன், டிக்டோக்கில் நேரலையில் அந்த வழக்கறிஞர் கூறினார்.

நேற்று முன் தினம், நூர் ஸ்வெட்லானா, பாதிக்கப்பட்டவரின் தந்தை முஹம்மத் ஜைலானியுடன், முகமது ஃபாயிக் ஸாஃப்ரானுக்கு விதிக்கப்படும் தீர்ப்புக்கான விசாரணையில் கலந்துகொள்வதற்கும் கேட்பதற்கும், இரண்டாவது முறையாக ஜப்பானுக்குச் சென்றார்.

கடந்த நவம்பரில் ஜப்பானுக்குப் புறப்பட்ட ஃபாயிக், அந்த நாட்டில் செயல்படும் இணைய மோசடி கும்பலுக்குப் பலியானதாக நம்பப்படுவதாகவும், இது தோயாமாவில் அவர் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்ததாகவும் ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும், அவரது கைது தொடர்பான தவறான தகவல்கள் இருந்தன. சுமார் 500,000 லிங்கன் மதிப்பிலான பணம், தங்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டதாக ஆரம்பக்கட்ட அறிக்கைகள் கூறின.

ஜப்பானிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 246 (1) (மோசடி தொடர்பான), அதே சட்டத்தின் பிரிவு 60 (ஒன்றாக செய்யப்பட்ட குற்றங்களுக்கான) ஆகியவற்றின் கீழ், கடந்த நவம்பரில் ஃபாயிக் விசாரிக்கப்பட்டார். இவை, மலேசியாவின் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 420, 34-க்கு கிட்டத்தட்ட ஒத்தவையாகும்.

நேற்று, மொழிபெயர்ப்பாளர் மூலம், முஹம்மத் ஃபாயிக் ஸாஃப்ரானுடன் பேசுவதற்கு, அவரது தந்தைக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்ததாக நூர் ஸ்வெட்லானா கூறினார்.

"ஜப்பானிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 25, மலேசியாவில் தண்டனையை நிறுத்தி வைப்பதைப் போன்றது. இருப்பினும், ஒருவர் தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியும்" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset