செய்திகள் மலேசியா
விசாரணையைத் தொடர்ந்து படினி, அதன் துணை நிறுவனங்களின் பல வங்கிக் கணக்குகளை எம்ஏசிசி முடக்கியுள்ளது
புத்ராஜெயா:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மேற்கொண்டு வரும் விசாரணைகள் தொடர்பாக படினி ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், அதன் துணை நிறுவனங்களின் பல வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.
ஆடை விற்பனையாளரான இந்நிறுவனம் இன்று புர்சா மலேசியாவிற்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி,
பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதி தடுப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானச் சட்டம் 2001-இன் பிரிவு 44(1)-இன் கீழ் இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
முன்னதாக தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணைக்கு நிறுவனம் உதவி வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட கணக்குகள் குழுமத்தின் அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தீவிரமாகப் பயன்படுத்தப்படவில்லை.
அதே வேளையில் குழுமம் தனது அன்றாட வணிகச் செயல்பாடுகளை ஆதரிப்பதற்காக மற்ற வங்கி வசதிகளையும் அணுகும் வசதியைக் கொண்டுள்ளது என்று படினி கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:11 pm
அக்டோபரில் தேர்தலை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ அன்வார் தயாராகிறார்: புளூம்பர்க்
April 24, 2026, 11:09 pm
பொறாமையின் காரணமாக முன்னாள் கணவரால் மியன்மார் பெண் கத்தியால் குத்திக் கொலை
April 24, 2026, 11:08 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் மரணமடைந்த வங்காளதேச ஆடவருக்கு நீதி கோரும் இணையவாசிகள்
April 24, 2026, 6:03 pm
எல் நினோ இந்த ஆண்டு நடுப்பகுதியில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது: ஐ.நா.
April 24, 2026, 4:03 pm
