செய்திகள் உலகம்
தாய்லாந்தின் மெகா திட்டம்: 2 லட்சம் வேலைவாய்ப்புகளுடன் உருவாகிறது புதிய வர்த்தகப் பாதை
பேங்காக்:
உலகளாவிய வர்த்தகப் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில், இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் 1 டிரில்லியன் பாட் மதிப்பிலான 'நிலப்பாலதத்' திட்டத்தைத் தாய்லாந்து அரசு துரிதப்படுத்தியுள்ளது.
மலாக்கா நீரிணையைச் சார்ந்து இருக்கும் 40 சதவீத உலக வர்த்தகப் போக்குவரத்தைக் குறைக்கவும், எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இத்திட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த மெகா திட்டத்தின்படி, தாய்லாந்து தீபகற்பத்தின் இருபுறமும் இரண்டு புதிய கடல் துறைமுகங்கள் கட்டப்படும். இவை அதிவேக நெடுஞ்சாலைகள், இரயில்வே வழித்தடங்கள் மூலம் இணைக்கப்படும்.
இதன் மூலம் சரக்குப் போக்குவரத்து காலம் நான்கு நாட்கள் வரை குறையும் என்றும், விநியோகச் செலவு 15 சதவீதம் வரை மிச்சமாகும் என்றும் அந்நாட்டின் துணைப் பிரதமர் பிபாத் ரட்சகிட்பிரகர்ன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக சுமார் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள், முன்னணி நிறுவனங்கள் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளன.
இருப்பினும், இத்திட்டத்திற்கான பெரும் செலவு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான சட்ட மசோதா 2026-ஆம் ஆண்டில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், கட்டுமானப் பணிகள் நிறைவடைய சுமார் 15 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 5:23 pm
2,700 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடு திரும்பிய பூர்வகுடிகள்
April 24, 2026, 12:37 pm
எரிசக்தித் துறையில் புதிய கூட்டணி: இந்தோனேசியாவிற்குச் சலுகை விலையில் எண்ணெய் வழங்க ரஷ்யா சம்மதம்
April 24, 2026, 9:47 am
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்: சர்வதேச ஊடக சங்கம்
April 23, 2026, 4:24 pm
பிரிட்டனில் சிகரெட்டுக்கு தடை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது
April 23, 2026, 3:00 pm
ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் ராணுவம்
April 23, 2026, 12:58 pm
பாலி விடுதியில் கைவரிசை காட்டிய இந்தியச் சுற்றுலாப் பயணிகள்: சோதனையில் சிக்கிய பொருட்கள்
April 23, 2026, 9:55 am
