நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எரிசக்தித் துறையில் புதிய கூட்டணி: இந்தோனேசியாவிற்குச் சலுகை விலையில் எண்ணெய் வழங்க ரஷ்யா சம்மதம்

ஜகார்த்தா: 

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ சமீபத்தில் மாஸ்கோவிற்கு மேற்கொண்ட பயணத்தின் பலனாக, அந்நாட்டிற்கு 150 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்தோனேசியாவின் எரிசக்தி, சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் ஹாஷிம் ஜோஜோஹாடிகுசுமோ இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்தோனேசியா தனது எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய மாற்று வழிகளைத் தேடி வந்தது. 

இந்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்யா 100 மில்லியன் பேரல் எண்ணெயைச் சலுகை விலையில் வழங்கவுள்ளது. மேலும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் கூடுதலாக 50 மில்லியன் பேரல் எண்ணெயை வழங்கவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இணக்கம் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தோனேசியா, ஒரு நாளைக்கு 1.6 மில்லியன் பேரல் எரிபொருளைப் பயன்படுத்துகிறது. ஆனால், அந்நாட்டினால் 600,000 பேரல் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. 

இந்த இடைவெளியைக் குறைக்கவும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும் இந்த ரஷ்ய ஒப்பந்தம் பெரும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. 

மேலும், 2026-ஆம் ஆண்டு முழுவதும் மானிய விலை எரிபொருட்களின் விலையை உயர்த்தப் போவதில்லை என்றும் இந்தோனேசிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset