நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரிட்டனில் சிகரெட்டுக்கு தடை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது

லண்டன்:

பிரிட்டனில் வருங்கால தலைமுறையினா் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில், 2009 முதல் பிறந்தவா்களுக்கு சிகரெட் விற்பனைக்கு வாழ்நாள் தடைவிதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தற்போது 18 வயது என்பது குறைந்தபட்ச விற்பனை வரம்பாக உள்ள நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த வயது வரம்பு உயா்த்தப்படும். இதன் விளைவாக, இன்றைய சிறுவா்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்கான சட்டபூா்வ உரிமையை இங்கிலாந்தில் ஒருபோதும் பெற முடியாது.

அரசா் சாா்லஸின் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரவுள்ள இச்சட்டம், வெறும் சிகரெட் மட்டுமின்றி புகையிலை சாா்ந்த இதர பொருள்கள், இ-சிகரெட்டுகளையும் கட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

பிரிட்டனில் புகைப்பிடித்தலால் ஆண்டுதோறும் சுமாா் 80,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதைத் தடுக்கக்கூடிய வகையில் இந்த சட்டம் உள்ளது என்று  அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset