நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்: சர்வதேச ஊடக சங்கம்

இஸ்தான்புல்:

கடந்த மார்ச் 2 முதல் லெபனானில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 27 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் வியாழக்கிழமை அறிக்கையை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தெற்கில் உள்ள தய்ரி நகரில் பத்திரிகையாளர்கள் குழுவை இஸ்ரேல் குறிவைத்ததை அந்த சங்கம் கண்டித்துள்ளது. 

இந்தத் தாக்குதலில் பத்திரிகையாளர் அமல் கலீல் கொல்லப்பட்டார்.

அவரது சக ஊழியர் ஜெய்னப் ஃபராஜ் காயமடைந்தார்.

கலீல் இதற்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து மரண அச்சுறுத்தல்களைப் பெற்றிருந்தார்.

அவரது மரணத்துடன், கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஊடகப் பணியாளர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset