நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்காக புனித மக்காவிற்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை சவூதி அரேபியா கடுமையாக்குகிறது

ரியாத்:

புனித யாத்ரீகர்களின் நலன், பாதுகாப்பு, வசதிகளை உறுதி செய்வதற்காக மக்காவிற்குள் நுழையும் அனைத்து நுழைவுப் புள்ளிகளையும், கஅபா உட்பட சவூதி அரேபிய அரசாங்கம் கடுமையாக்கி வருகிறது.

ஜித்தாவில் உள்ள மலேசியத் துணைத் தூதர் தெங்கு முஹம்மது த்ஸரைஃப் ராஜா அப்துல் காதிர் இதனை தெரிவித்தார்.

புனித பூமி அல்லது மக்காவிற்குள் நுழையும் ஒவ்வொரு புனிதப் பயணியும், சவூதி அரேபிய அதிகாரிகளால் சாலைத் தடுப்புகளில் ஸ்கேன் செய்யபடுவார்கள்.

ஆவணச் சரிபார்ப்பு செயல்முறையுடன் கூடிய கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.

Tears of joy as pilgrims arrive at Jeddah's Hajj Terminal | The National

புனிதப் பயணிகளின் பாதுகாப்பு, நலன், வசதிகளை உறுதி செய்வதற்கும், செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி அனுமதி இல்லாமல் தனிநபர்கள் புனித பூமிக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது..

புனித பூமி அனுமதி இல்லாமல் நுழையும் பயணிகளால் நிரம்பி வழிந்தால், ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.

உதாரணமாக, அது இரண்திலிருந்து மூன்று மில்லியனைத் தாண்டலாம்.

இது சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் யாத்ரீகர்களுக்கும் சிரமங்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset