நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் ராணுவம்

டெஹ்ரான்:

அமெரிக்கா - ஈரான் இடையே​யான 2 வார கால இடைக்​கால போர் நிறுத்​தம் நேற்​றுடன் முடிந்​தது. இந்​நிலை​யில், கால​வரை​யின்றி சண்டை நிறுத்தத்தை நீட்​டிப்​ப​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறி​வித்​தார். ஆனால், மாறி மாறி பேசிவரும் டிரம்புக்கு ஈரான் எந்த பதி​லும் அளிக்​க​வில்​லை.

இந்​நிலை​யில், ஈரான் சரக்​குக் கப்​பல்​கள் சில​வற்றை அமெரிக்கா துப்​பாக்​கிச் சூடு நடத்தி சிறைபிடித்​துள்​ளது. மேலும், ஈரான் துறை​முகங்​களை தொடர்ந்து முற்​றுகை நிலை​யில் வைத்​திருக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்​தர​விட்​டுள்​ளார். இதனால் ஈரானின் கச்சா எண்​ணெய் விற்​பனை  முடங்​கி​யுள்​ளது.

அமெரிக்​கா​வின் நெருக்​கடிக்கு பதிலடி அளிக்​கும் வகை​யில், ஹார்​முஸ் நீரிணைப் பகு​தி​யைக் கடக்க முயன்ற 3 சரக்​குக் கப்​பல்​கள் மீது ஈரான் ராணுவம் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​யது. 

இதில் ஒரு சரக்​குக் கப்​பல் சேதம் அடைந்​துள்​ளது. ஆனால், ஊழியர்​களுக்கு எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. இந்​தத் தாக்​குதல் மூலம் ஹார்​முஸ் நீரிணை தொடர்ந்து தங்​கள் கட்​டுப்​பாட்​டில்​தான் உள்​ளது. தங்​கள் அனு​ம​தி​யின்றி எந்​தக் கப்​பலும் ஹார்​முஸ் நீரிணையைக் கடந்து செல்ல முடி​யாது என ஈரான் ராணுவம் எச்​சரித்​துள்​ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset