செய்திகள் மலேசியா
பலசரக்குக் கடையில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆண் கைது செய்யப்பட்டார்
கெரிக்:
ஒரு பெண் பணிபுரியும் பலசரக்குக் கடையில், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சுய இன்பத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் ஒரு ஆண் வைரலானதைத் தொடர்ந்து, போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 5.57 மணிக்கு, சம்பந்தப்பட்ட பலசரக்குக் கடையின் ஊழியருமான பாதிக்கப்பட்டவரிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்த புகார் பெறப்பட்டதாகக் கெரிக் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் அப்துல் சமாட் ஒத்மான் தெரிவித்தார்.
"பலசரக்குக் கடையில் பணிபுரியும் பாதிக்கப்பட்டவர், முதலில் ஒரு ஜிப் திறக்கும் சத்தத்தைக் கேட்டார். இது பாதிக்கப்பட்டவரைப் பார்க்கச் செல்ல வைத்தது. அதற்குப் பின்னர், சந்தேக நபர் அநாகரீகமான செயலில் ஈடுபட்டு கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.
பாதிக்கப்பட்டவர் தனது கைப்பேசியைப் பயன்படுத்தி சந்தேக நபரின் செயலைப் பதிவு செய்தார். மேலும், அவர் அங்கிருந்து கிளம்பும் வரை சந்தேக நபரைக் கடிந்து கொண்டார்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
55 வயதான சந்தேக நபர், கெரிக் பேருந்து நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று இரவு 9.45 மணிக்குக் கைது செய்யப்பட்டதாக அப்துல் சமாட் கூறினார். இன்று காலை தடுப்பு காவலுக்கான அனுமதியைப் போலிஸார் பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வேலையில்லாத, திருமணமாகாத சந்தேக நபர், மனநல சிகிச்சை பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.
இம்மாதிரியான முகம் சுழிக்க வைக்கும் செயல்கள் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதோடு சமூகத்தின் தோல்வியையும் பிரதிபலிக்கிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:28 am
சாம்பலான வீடுகள்; தளராத கல்வி ஆர்வம்: சண்டாக்கான் மாணவியின் நெகிழ்ச்சிப் போராட்டம்
April 24, 2026, 11:14 am
குடிபோதையில் இருந்த ராணுவ அதிகாரியால் மேக்ஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து
April 24, 2026, 10:52 am
சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குச் சாட்டையடி: 45 சட்டவிரோதத் தொழிலாளர்கள் அதிரடியாகக் கைது
April 24, 2026, 10:48 am
ஆவ்ட்டிசம் அட்டைப் பதிவுகள் கிட்டத்தட்ட 89,000ஆக அதிகரித்துள்ளன: சுப்கிப்ளி
April 24, 2026, 10:32 am
வரலாற்றுப் பக்கங்களில் அழியாப் புகழ்: புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஷாரோம் அஹ்மத் காலமானார்
April 24, 2026, 10:28 am
ஈப்போவில் பரபரப்பு: வலுக்கட்டாயமாகப் பணம் கேட்டு கார் கண்ணாடியை உடைத்த நபர் கைது
April 24, 2026, 10:05 am
