செய்திகள் மலேசியா
வரலாற்றுப் பக்கங்களில் அழியாப் புகழ்: புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஷாரோம் அஹ்மத் காலமானார்
கோலாலம்பூர்:
வரலாற்றாசிரியரும், பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (யூ.எஸ்.எம்.) முன்னாள் நிர்வாகியுமான ஷாரோம் அஹ்மத், 86 வயதில் காலமானார்.
தனது தந்தை ஒரு மதிக்கத்தக்க கல்வியாளரும், சிறந்த பல்கலைக்கழக நிர்வாகியுமாவார் என்று அவரது மகன் அஸ்மி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
"இருப்பினும், எங்களைப் பொறுத்தவரை, அவர் ஒரு அன்பான கணவர், தந்தை, தாத்தா ஆவார். மேலும், அவர் குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்பட்டார்" என்று தேர்தல் ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.) துணைத் தலைவருமான அவர் கூறினார்.
செப்டம்பர் 1939 இல் பிறந்த ஷாரோம், ஒரு வரலாற்றாசிரியராகவும், யூ.எஸ்.எம்.-இல் பல முக்கிய தலைமைப் பதவிகளை வகித்ததிலும், அவரது பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்.
1962 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதல் வகுப்பு கௌரவப் பட்டத்தைப் பெற்றார். இதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகத்தில் அந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் மலாய் நபர் என்ற பெருமையை மகுடமாக சூடினார்.
பின்னர், அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வரலாற்றில் முதுகலைப் பட்டத்தில் பயின்றார். அதனைத் தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டில், லண்டன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில் தென்கிழக்கு ஆசிய வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார்.
கல்விக்காக அவர் ஆற்றிய பணி 1963 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் உதவி விரிவுரையாளராகத் தொடங்கியது. பின்னர், மூத்த விரிவுரையாளராகவும், கலை. சமூக அறிவியல் புலத்தின் துணைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார்.
1973 ஆம் ஆண்டில், அவர் யூ.எஸ்.எம்.-இல் வரலாற்றுப் பேராசிரியராகவும், மானுடவியல் ஆய்வுகள் துறைத் தலைவர் சேவை புரிந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், (மாணவர் விவகாரங்களுக்கான) முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். மேலும், கல்வி விவகாரங்கள், ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவற்றில் மூத்த பதவிகளையும் வகித்தார்.
"யூ.எஸ்.எம்.-ஐ விட்டு வெளியேறிய பின்னர், ஷாரோம், ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு சமூக மையத்தை வழிநடத்துவதற்கு, பொது நலன் கருதி (pro bono) நியமிக்கப்பட்டார்.
"அதனைத் தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டில், வாவாசான் கல்வி அறக்கட்டளைக்கு அவர் முதல் தலைமை நிர்வாக அதிகாரியானார்.
நிர்வாகப் பொறுப்புகளைத் தவிர, ஷாரோம் தனது கல்வி எழுத்துக்கள் மூலமும், குறிப்பாக கெடாவின் வரலாறு, கெடா-சியாம் உறவுகள் தொடர்பானவற்றின் மூலமும் அறியப்பட்டார்.
வரலாற்றாசிரியராகவும் கல்வியாளராகவும் சிறந்து விளங்கிய அவர், தனது பங்களிப்பால் சமூகத்தில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
நாட்டின் வரலாற்றுக்கு முக்கிய புள்ளியாக விளங்கிய ஷாரோம் அஹ்மத் இன்று தாமே ஒரு வரலாறாய் நினைவுகூறப்படுவார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:29 am
பலசரக்குக் கடையில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆண் கைது செய்யப்பட்டார்
April 24, 2026, 11:28 am
சாம்பலான வீடுகள்; தளராத கல்வி ஆர்வம்: சண்டாக்கான் மாணவியின் நெகிழ்ச்சிப் போராட்டம்
April 24, 2026, 11:14 am
குடிபோதையில் இருந்த ராணுவ அதிகாரியால் மேக்ஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து
April 24, 2026, 10:52 am
சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குச் சாட்டையடி: 45 சட்டவிரோதத் தொழிலாளர்கள் அதிரடியாகக் கைது
April 24, 2026, 10:48 am
ஆவ்ட்டிசம் அட்டைப் பதிவுகள் கிட்டத்தட்ட 89,000ஆக அதிகரித்துள்ளன: சுப்கிப்ளி
April 24, 2026, 10:28 am
ஈப்போவில் பரபரப்பு: வலுக்கட்டாயமாகப் பணம் கேட்டு கார் கண்ணாடியை உடைத்த நபர் கைது
April 24, 2026, 10:05 am
