செய்திகள் மலேசியா
பெண்கள் கழிவறையில் அத்துமீறல்: இளைஞனுக்கு RM3,500 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர்:
செந்தூல் எல்.ஆர்.டி நிலையத்தின் பெண்கள் கழிவறையில் புகுந்து பெண் ஒருவரை வேவு பார்த்த 23 வயது இளைஞனுக்கு நீதிமன்றம் RM3,500 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.
இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், குற்றவாளியான அப்துல் சமாத் ரோஸ்மானுக்கு நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி காலை 8 மணியளவில், 44 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கழிவறையைப் பயன்படுத்தியபோது, அதன் மேற்கூரையில் ஒரு ஆணின் கால்கள் நீட்டிக்கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த இளைஞனை அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக மடக்கிப் பிடித்தனர்.
நீதிமன்ற விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அந்த இளைஞன், தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டதோடு இனி இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொதுமக்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு இந்தத் தண்டனையை உறுதி செய்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:29 am
பலசரக்குக் கடையில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆண் கைது செய்யப்பட்டார்
April 24, 2026, 11:28 am
சாம்பலான வீடுகள்; தளராத கல்வி ஆர்வம்: சண்டாக்கான் மாணவியின் நெகிழ்ச்சிப் போராட்டம்
April 24, 2026, 11:14 am
குடிபோதையில் இருந்த ராணுவ அதிகாரியால் மேக்ஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து
April 24, 2026, 10:52 am
சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குச் சாட்டையடி: 45 சட்டவிரோதத் தொழிலாளர்கள் அதிரடியாகக் கைது
April 24, 2026, 10:48 am
ஆவ்ட்டிசம் அட்டைப் பதிவுகள் கிட்டத்தட்ட 89,000ஆக அதிகரித்துள்ளன: சுப்கிப்ளி
April 24, 2026, 10:32 am
வரலாற்றுப் பக்கங்களில் அழியாப் புகழ்: புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஷாரோம் அஹ்மத் காலமானார்
April 24, 2026, 10:28 am
