செய்திகள் மலேசியா
மலையேற்றத்தின் போது சரிந்து விழுந்த வெளிநாட்டுப் பெண்: கடும் சவால்களுக்கு மத்தியில் தொடரும் மீட்பு நடவடிக்கை
கூச்சிங்:
சரவாக் மாநிலத்தின் சந்தூபோங் மலையில் ஏறிய ஆஸ்திரேலியப் பெண்மணி ஒருவர், மலையிலிருந்து இறங்கும்போது தவறி விழுந்து விபத்துக்குள்ளானார். பெலிண்டா லேப்பியர் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பயணி, மலையின் கடினமான பகுதியில் சிக்கிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு 8:20 மணியளவில் தீயணைப்பு, மீட்புத் துறைக்குக் கிடைத்த தகவலையடுத்து, மீட்புக் குழுவினர் இரவு 9:43 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருக்கும் மீட்புப் படையினர், அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளனர். இருப்பினும், அவர் இருக்கும் இடத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்.
பெரிய பாறைகள், முறிந்த மரங்கள், அடர்ந்த இருள் காரணமாக மீட்புப் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டது. இதனால் இன்று அதிகாலை 3:30 மணியளவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை, இன்று காலை மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்புக் குழுவினர், வனத்துறை அதிகாரிகள் இணைந்து, தடைகளைத் தாண்டி அந்தப் பெண்மணியைப் பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:29 am
பலசரக்குக் கடையில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆண் கைது செய்யப்பட்டார்
April 24, 2026, 11:28 am
சாம்பலான வீடுகள்; தளராத கல்வி ஆர்வம்: சண்டாக்கான் மாணவியின் நெகிழ்ச்சிப் போராட்டம்
April 24, 2026, 11:14 am
குடிபோதையில் இருந்த ராணுவ அதிகாரியால் மேக்ஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து
April 24, 2026, 10:52 am
சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குச் சாட்டையடி: 45 சட்டவிரோதத் தொழிலாளர்கள் அதிரடியாகக் கைது
April 24, 2026, 10:48 am
ஆவ்ட்டிசம் அட்டைப் பதிவுகள் கிட்டத்தட்ட 89,000ஆக அதிகரித்துள்ளன: சுப்கிப்ளி
April 24, 2026, 10:32 am
வரலாற்றுப் பக்கங்களில் அழியாப் புகழ்: புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஷாரோம் அஹ்மத் காலமானார்
April 24, 2026, 10:28 am
ஈப்போவில் பரபரப்பு: வலுக்கட்டாயமாகப் பணம் கேட்டு கார் கண்ணாடியை உடைத்த நபர் கைது
April 24, 2026, 10:05 am
