நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் பரபரப்பு: வலுக்கட்டாயமாகப் பணம் கேட்டு கார் கண்ணாடியை உடைத்த நபர் கைது

ஈப்போ: 

இங்குள்ள கெர்பாங் மாலாம் பகுதியில், கார் உரிமையாளரை அச்சுறுத்தி, வாகனத்தின் கண்ணாடியை உடைத்த 43 வயது உள்ளூர் நபரைப் போலிசார் கைது செய்துள்ளனர். 

காரின் முகப்பு விளக்குகளை (Headlamps) உரிமையாளரின் அனுமதி இன்றித் தானாக முன்வந்து துடைத்த அந்த நபர், அதற்காக வலுக்கட்டாயமாகப் பணம் கேட்டுப் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

வாகன உரிமையாளர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், அருகில் இருந்த கல்லை எடுத்து காரின் முன் பக்கக் கண்ணாடியை எறிந்து உடைத்துள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலறிந்து விரைந்து செயல்பட்ட போலிசார், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அதிகாலையில் அந்த நபரைக் கைது செய்தனர். பிடிபட்டவருக்கு ஏற்கனவே எட்டு குற்றப் பின்னணிகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பொது இடங்களில் இதுபோன்று தேவையற்ற சேவைகளை வழங்கி, பொதுமக்களை வற்புறுத்திப் பணம் பறிக்கும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset