செய்திகள் மலேசியா
சாம்பலான வீடுகள்; தளராத கல்வி ஆர்வம்: சண்டாக்கான் மாணவியின் நெகிழ்ச்சிப் போராட்டம்
சண்டாக்கான்:
இங்குள்ள கம்போங் பஹாகியாவில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் சாம்பலாகின. இந்தத் துயரத்திலும், 14 வயது மாணவி நூர்மசேரா மோமல், சீருடை, காலணிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் இழந்த போதிலும், சாதாரண உடை, செருப்பு அணிந்து பள்ளிக்குச் சென்று தனது கல்வி ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தன் தங்கை தங்குவதற்கு இடமின்றித் தவித்தாலும், கல்வியைத் தொடர வேண்டும் என்ற உறுதியோடு இருப்பதைப் பார்த்து நெகிழ்வதாக அவரது சகோதரி நூர்ஹானா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் சிரமத்தைக் குறைக்க, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலா RM300 ரிங்கிட் சிறப்பு நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் 12 பள்ளிகளைச் சேர்ந்த 454 மலேசிய மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்த நிதியைக் கொண்டு சீருடைகள், புத்தகங்கள், கல்வி உபகரணங்களை மீண்டும் வாங்க முடியும் என்பதால், இது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆறுதல் எனப் பெற்றோர்கள் பிரதமருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தின்போது ஏற்பட்ட பதற்றமான சூழலில், பல மாணவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவே முன்னுரிமை அளித்ததால், பள்ளிப் பைகளைக்கூட எடுக்க முடியாமல் போனதாக வருத்தத்துடன் தெரிவித்தனர்.
தற்போது தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர், வீடுகளை மீண்டும் கட்டித் தர அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த இக்கட்டான நிலையிலும், ஆசிரியர்கள் வழங்கி வரும் உதவிகள் மாணவர்களின் கல்வித் தடைபடாமல் இருக்கப் பெரும் துணையாக உள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:29 am
பலசரக்குக் கடையில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆண் கைது செய்யப்பட்டார்
April 24, 2026, 11:14 am
குடிபோதையில் இருந்த ராணுவ அதிகாரியால் மேக்ஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து
April 24, 2026, 10:52 am
சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குச் சாட்டையடி: 45 சட்டவிரோதத் தொழிலாளர்கள் அதிரடியாகக் கைது
April 24, 2026, 10:48 am
ஆவ்ட்டிசம் அட்டைப் பதிவுகள் கிட்டத்தட்ட 89,000ஆக அதிகரித்துள்ளன: சுப்கிப்ளி
April 24, 2026, 10:32 am
வரலாற்றுப் பக்கங்களில் அழியாப் புகழ்: புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஷாரோம் அஹ்மத் காலமானார்
April 24, 2026, 10:28 am
ஈப்போவில் பரபரப்பு: வலுக்கட்டாயமாகப் பணம் கேட்டு கார் கண்ணாடியை உடைத்த நபர் கைது
April 24, 2026, 10:05 am
