நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆவ்ட்டிசம் அட்டைப் பதிவுகள் கிட்டத்தட்ட  89,000ஆக அதிகரித்துள்ளன: சுப்கிப்ளி

புத்ராஜெயா:

கடந்த 2021இல் சுமார் 23,000 ஆக இருந்த ஆவ்ட்டிசம் குறைபாடு அட்டைப் பதிவுகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 89,000 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.

கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிப்பு மக்களிடையே விழிப்புணர்வு நிலை இப்போது அதிகமாக இருப்பதை காட்டுகிறது.

மேலும் பெற்றோர்கள் அதிக அக்கறையுடன் இருப்பதையும், ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் பயனுள்ளதாக இருப்பதையும் குறிக்கிறது.

அதே வேளையில் நோயறிதலைப் பெறுவதற்கு சமூகம் அதிகளவில் தயாராக இருப்பதை இது காட்டுகிறது.

குறிப்பாக சமூகம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆவ்ட்டிசம் ஒரு நோய் அல்ல. அது நரம்பியல் வளர்ச்சியின் ஒரு பரந்த நிலையாகும்.

இந்தக் குழுவினர் தனித்துவமான நரம்பியல் பன்முகத்தன்மைத் திறமைகளைக் கொண்டுள்ளனர்.

மேலும் அறிவியல், கலை, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திறன் கொண்டவர்கள் என்று ஆவ்ட்டிசம் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு அவர் முகநூலில் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset