நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிபோதையில் இருந்த ராணுவ அதிகாரியால் மேக்ஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து

புத்ராஜெயா:

மேக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்துக்கு குடிபோதையில் இருந்த ராணுவ அதிகாரியின் அலட்சியமே காரணம்.

கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறையின் தலைவர் முகமது சம்சுரி முகமது ஈசா இதனை கூறினார்.

நேற்று அதிகாலை மேக்ஸ் நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்று இ-ஹெய்லிங் எம்பிவி கார் மீது மோதிய இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விபத்தில் 22 வயதான இ-ஹெய்லிங் பயணி ஒருவர் உயிரிழந்ததார்.

காலையில் பெரோடுவா அல்சா, ஃபோர்டு ஃபீஸ்டா கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது.

31 வயதான ராணுவ அதிகாரி ஒருவர் ஓட்டி வந்த ஃபோர்டு ஃபீஸ்டா, 41 வயதான நபர் ஓட்டி வந்த பெரோடுவா அல்சா காருடன் நேருக்கு நேர் மோதியது.

குறிப்பாக அக்கார் எதிர் திசைப் பாதைக்குள் நுழைந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கேஎல்ஐஏவிற்கு அப்போதுதான் வந்தடைந்த 22 வயது ஆண், 20 வயது பெண் என இரண்டு வங்காளதேச பயணிகளை அந்த எம்பிவி கார் ஏற்றிச் சென்றதாக அவர் கூறினார்.

இந்த மோதலின் விளைவாக ஆண் பயணி தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதே சமயம், பெண் பயணிக்கு கை கால்களில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் மேலும் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset