செய்திகள் மலேசியா
பினாங்கு அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணிபுரிய மாட்டார்கள்: முதலமைச்சர்
ஜார்ஜ்டவுன்:
மாநில அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்தே பணிபுரியும் கொள்கையைத் தற்போதைக்கு செயல்படுத்த வேண்டாம் என்று பினாங்கு மாநில நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளதாக சோ சூன் யூங் கூறியுள்ளார்.
துறைசார் செயல்பாட்டுத் தேவைகள், சேவை விநியோகத் திறன், தற்போதைய சூழ்நிலை ஆகியவற்றின் விரிவான மதிப்பீட்டைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதாகவும், அவ்வப்போது கொள்கையின் தேவையை மறுபரிசீலனை செய்வதாகவும் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
"அதிக நெகிழ்வான அணுகுமுறை தேவைப்படும் மாற்றங்கள் இருந்தால், வீட்டிலிருந்தே பணிபுரியும் கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, அரசு ஊழியர்களின் நலன், சேவை விநியோகத்தின் திறன் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை உறுதி செய்வதற்காக, பொருத்தமான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
"பொதுத் துறை ஊழியர்களின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டு, பொதுச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் மாநில அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது" என்று அவர் புதன்கிழமை, ஏப்ரல் 22 ஒரு அறிக்கையில் கூறினார்.
ஏப்ரல் 1 ஆம் தேதி, அமைச்சுகள், நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், அரசு சார்ந்த நிறுவனங்களை உள்ளடக்கிய வீட்டிலிருந்தே பணிபுரியும் கொள்கையை, ஏப்ரல் 15 முதல் நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறியிருந்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 3:49 pm
மருத்துவமனையில் நூதன மோசடி: நோயாளிகளிடம் பணம் பறித்த பெண் கைது
April 22, 2026, 3:02 pm
ஜாலான் செமினியில் அடுத்தடுத்து விபத்துகள்
April 22, 2026, 1:53 pm
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கின் நிலை என்ன?: அமைச்சர் கோபிந்த் சிங் கேள்வி
April 22, 2026, 1:52 pm
