செய்திகள் மலேசியா
230 மில்லியன் ரிங்கிட் கையாடல் வழக்கில் ஜகாத் நிறுவனங்கள் சம்பந்தப்படவில்லை: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி
கோலாலம்பூர்:
அரசு சாரா அமைப்பில் உள்ள ஒருவர் பெரிய அளவிலான ஜகாத் கையாடல் கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாகி கூறினார்.
தேவையுள்ளவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய சில நிதி வசூல்களிலிருந்து பெறப்பட்ட கமிஷன்கள் உட்பட, சம்பந்தப்பட்ட அந்த அரசு சாரா அமைப்பு பல்வேறு தரப்பினரிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றதாக அவர் கூறினார்.
இருப்பினும், இந்த நிதிகள் அவற்றின் நோக்கத்தை அடையவில்லை. குறிப்பாக திருக்குர்ஆன் வரையறுக்கும் எட்டு பிரிவினருக்கு சென்றடையவில்லை.
மாறாக அவர்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் ஆடம்பர சொத்துக்களை வாங்குவது உட்பட, தனிப்பட்ட ஆதாயத்திற்காக இந்த நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர் என்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
230 மில்லியன் ரிங்கிட் ஜகாத் பணம் கையாடல் வழக்கு குறித்த விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தீவிரமாக உள்ளது என்று டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 5:49 pm
மலாக்கா நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு வரி விதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது
April 22, 2026, 5:44 pm
தகவல்கள் இன்னும் முழுமையடையாததால் ஆர்எஸ்-1 அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை: அமிரூடின் ஷாரி
April 22, 2026, 5:43 pm
டான்ஶ்ரீ இசா சமத்தின் மறு ஆய்வு மனு: மே 13ஆம் தேதி விசாரிக்கப்படும்
April 22, 2026, 3:49 pm
மருத்துவமனையில் நூதன மோசடி: நோயாளிகளிடம் பணம் பறித்த பெண் கைது
April 22, 2026, 3:15 pm
பினாங்கு அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணிபுரிய மாட்டார்கள்: முதலமைச்சர்
April 22, 2026, 3:02 pm
