செய்திகள் மலேசியா
ஜாலான் செமினியில் அடுத்தடுத்து விபத்துகள்
காஜாங்:
ஜாலான் செமினியில் சில மணி நேர இடைவெளியில் இரண்டு தனித்தனி சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் ஒரு பாதிக்கப்பட்டவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இந்த விபத்துகள் புதன்கிழமை, ஏப்ரல் 22 நிகழ்ந்ததாகக் காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் ஒரு அறிக்கையில், கூறினார்.
காலை 5.30 மணியளவில் நிகழ்ந்த முதல் சம்பவத்தில் மழை பெய்து சாலையெங்கும் வழுக்களாக இருந்ததால் கார் ஒன்று சாலையில் சறுக்கியதாக நம்பப்பட்டது.
"விசாரணையில், 24 வயதுடைய உள்ளூர் ஆணால் ஓட்டப்பட்ட கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரில் உள்ள ஒரு விளக்குக் கம்பத்தில் மோதியதாகக் கண்டறியப்பட்டது," என்றார் அவர்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அதே சாலையில் பயணித்த ஒரு கார் திடீரென பிரேக் வைத்ததைத் தொடர்ந்து சறுக்கியதில், மற்றொரு சாலை விபத்து நிகழ்ந்தது.
அதன் பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அந்தக் காரைத் தவிர்க்க முயன்றபோது விழுந்ததில் அவருக்குச் சிறிய அளவில் காயம் ஏற்பட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் காயங்களின்றி தப்பினார்.
"கார் ஓட்டுநரும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் இதுவரை போலிஸ் புகாரைப் பதிவு செய்யவில்லை" என்றார் அவர்.
கார்களில் ஒன்றிலிருந்து கசிந்த எண்ணெயைச் சுத்தம் செய்ய, தீயணைப்பு, மீட்புத் துறை சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
"குற்றவியல் சட்டம் பிரிவு 10 LN 166/59-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றார் அவர்.
மழை காலத்தில் வழுவழுப்பான சாலைகளால் விபத்துகள் அதிகரித்து வருவதால், அனைத்து சாலை பயனர்களும் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பொறுமையுடனும் வாகனம் ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 3:49 pm
மருத்துவமனையில் நூதன மோசடி: நோயாளிகளிடம் பணம் பறித்த பெண் கைது
April 22, 2026, 3:15 pm
பினாங்கு அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணிபுரிய மாட்டார்கள்: முதலமைச்சர்
April 22, 2026, 1:53 pm
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கின் நிலை என்ன?: அமைச்சர் கோபிந்த் சிங் கேள்வி
April 22, 2026, 1:52 pm
